மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக நேற்றைய தினம் S.K.O விளையாட்டு கழகத்தினால் உருவாக்கப்பட்ட உடல் வலுவூட்டல் நிலையத்தின் ஆறாவது ஆண்டு விழாவினை ஒட்டி கட்டளகர் போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது உடல் வலிவூட்டல் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாகஅவர்களுக்கான சான்றிதழ்களை பிள்ளையான் வழங்கி இருந்தார்.
இது தொடர்பில் தம்னது முகநூலில் பதிவிட்டுள்ள பிள்ளையான்,
கடந்த 2015 ஆம் ஆண்டளவில் S.K.O விளையாட்டுக் கழகத்தின் தலைமை ஆசிரியரும் நானும் இணைந்து எமது கராத்தே மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்பதற்காக விசேட கராத்தே குழாம் (pool team) ஒன்றினை உருவாக்கினோம்.
அத்துடன் அதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்து எமது சொந்த செலவில் கொண்டு வந்து தேவையான பயிற்சிகளையும் வழங்கிஇருந்தோம்.
நான் சிறைச்சாலை சென்ற பின்னரும் அந்த முயற்சிகள் வீண் போகவில்லை என்பதை பறைசாற்றும் வண்ணமாக 2019 ஆம் ஆண்டு தேசிய மட்ட கராத்தே விளையாட்டுப் போட்டியில் வடகிழக்கில் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையினை சேர்ந்த எஸ். வசந்தன் என்ற மாணவன் பெற்றிருந்தார்.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசியரீதியான கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை செல்வி. அச்சுகா என்ற மாணவியும் பெற்றிருந்தார்.
இந்த வெற்றியானது வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவதும் இறுதியுமான சாதனையாக காணப்படுகின்றது.
எனவே எதிர்காலத்தில் எமது மாணவர்கள் இன்னும் பல சாதனைகளை மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிகழ்த்துவதற்க்கு எம்மால் ஆன முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என பிள்ளையான் குறிப்பிட்டார்.