ரஞ்சன் ராமநாயக்கவின் மனுவை விசாரணைக்கு எடுக்காது நிராகரிக்க தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம்


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுக்காது, நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தவர்களுக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்துள்ளது.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதை தடுக்குமாறு கோரி, ரஞ்சன் ராமநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அர்ஜூன ஒபேசேகர, சோபித ராஜகருண ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர் கோரியுள்ள விதத்தில் சலுகையை வழங்க சட்டத்தில் இடமில்லை என நீதியரசர்கள் கூறியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.