வரலாற்றில் முதன்முறை: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்- விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சி!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் விண்கலம் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி எனப்படும் சிறிய ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

பெர்சவரன்ஸ் ரோவர்

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்கள்

அண்மையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர். மேலும் நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

மிகச்சிறிய ரக ஹெலிகாப்டர்

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் அழைகப்படும். வரலாற்றில் முதல்முறையாத பூமிக்கு வெளியே ஹெலிகாப்டர் பறக்க வைக்கப்படுகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் வயிற்றுப்பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டர் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த சிறியரக ஹெலிகாப்டர் முன்னதாகவே பறக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திட்டத்தை நாசா ஒத்தி வைத்தது. தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து இந்த சிறிய ரக ஹெலிகாப்டர் பிரிந்து தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் ஆனது 1.8 கிலோ எடை கொண்டதாகும். பூமியை கடந்து வேறு இடத்தில் ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல்முறை. இந்த சிறய ரக விமானம் ஆனது பூமி நேரத்தின்படி 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கிறது.

நாசா ஜேபிஎல் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது எனவும். இதோடு சுமார் 421 மில்லியன் கிமீ பறந்த விண்கலம் பயணம் முடிந்தது. கடும் குளிரை சமாளிப்பதே இதன் அடுத்த இலக்காக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். காரணம் செவ்வாய் கிரகத்தில் -90 டிகிரி வெப்பநிலை இருக்கும். வருகிற நாட்களில் ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்

விடாமுயற்சி மூலம் இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் இது அதன் சொந்த பேட்டரியை சோல் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும். இந்த ஹெலிகாப்டர் ஆனது பேட்டரி போன்ற முக்கிய கூறுகளை பாதுகாப்பாக கையாளுகிறது. அதேபோல் சில முக்கிய மின்னணுவியல் மிகுந்த குளிர் வெப்பநிலையிலும் பாதிப்படையாது என கூறப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி

அதேபோல் அடுத்த இரண்டு நாட்களில் ஹெலிகாப்டரின் சோலார் பேனல்கள் சரியாக இயங்குகின்றனவா எனவும் மோட்டார்கள் மற்றும் சென்சார்களை சோதிக்கும் முன்பாக பேட்டரி சார்ஜ் செய்வது குறித்து சோதிக்கப்படும் என தெரவிக்கப்படுகிறது. முதல் விமான முயற்சி பறக்கும் சோதனை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு முன்னதாக செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.