’வாக்களிக்கும்முன் சிந்திக்க மறுக்காதீர்கள்’ – வைரமுத்து வீடியோ வெளியீடு!

வாக்களிப்பதன் அவசியத்தை பாடலாசிரியர் வைரமுத்துவும், நடிகர் ஆர்.ஜே பாலாஜியும் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

நாளை தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களிப்பதன் அவசியத்தை கவிஞர் வைரமுத்துவும், நடிகர் ஆர்.ஜே பாலாஜியும்
வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல. அதிகாரத்தைக் கொடுக்கும் அதிகாரம். அன்பைக் கொடுக்க சிந்திக்க தேவையில்லை. அதிகாரத்தைக் கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள். சிந்தித்தப்பின் வாக்களிக்கத் தவறாதீர்கள்” என்று வெளியிட்டுள்ளார். நடிகர் ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,

”நாளைக்கு முக்கியமான நாள். அடுத்த 5 வருடம் நம்மை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்ற முடிவை நாம் எடுக்கப்போகும் நாள். இரண்டு மாதமாக அனல் பறக்கும் பிரச்சாரத்தப் பார்த்தோம். அரசியல் கட்சிகள் அனைவரின் அனைத்து சைடிலும் வாக்குறுதிகளை கேட்டுட்டோம். இதன்பிறகு நாம் முடிவெடுக்கும் நாள் வந்துவிட்டது. தேர்தல் தேதியை ஒரு விடுமுறை நாளாகப் பார்க்காமல் அதை பொறுப்போடும் பார்க்கும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அதேசமயம் கையில் மையுடன் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு இந்தியனாக கடமையை செய்துவிட்டேன் என்கிறார்கள் பலர். அதுமட்டும் போதுமா? அதேபோல, வீட்டில் சொல்கிறவர்களுக்கு ஓட்டு போடுகிறோம். பிடித்த சாதி கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம். இதெல்லாம் சரியானதல்ல. நாம் எந்தத் தொகுதியில் இருக்கோம். நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் குறித்தும் பின்னணி குறித்தும் பத்து 15 நிமிடம் தேடிப்படித்து அவர்களில் சிறந்தவர்களுக்கு ஓட்டுப் போட்டாலே போதும்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.