விக்ரம் பிரபு – வாணி போஜனின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படப்பிடிப்பு நிறைவு!

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி’ பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

imageimage

அறிமுக இயக்குநர் கார்த்திக் செளத்ரி இயக்க, மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

பாரதியாரின் கவிதை வரிகளான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்று டைட்டில் வைத்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பின. இப்படத்தின் மோஷன் போஸ்டர் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.