4ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எப்12.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எப்12 டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி எப்12 டிஸ்பிளே வசதி

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 90Hz refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் என பல்வேறு

ஆதரவுகளுடன் இந்த கேலக்ஸி எப்12 மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட்

எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட்

இந்த சாம்சங் கேலக்ஸி எப்12 மாடலில் மிகவும் எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு கேலக்ஸி எப்12 மாடல் வெளிவரும்.

ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!

தி இடம்பெறும் என்று கூறப்பட்டு

சாம்சங் கேலக்ஸி எப்12 மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/28ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

48எம்பி கேமரா

48எம்பி கேமரா

சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறும். பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்12 மாடல்.

அறிமுகம் உறுதி., அதுவும் விரைவில்: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி- எதிர்பார்க்கப்படும் அம்சம், விலை!அறிமுகம் உறுதி., அதுவும் விரைவில்: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி- எதிர்பார்க்கப்படும் அம்சம், விலை!

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்

பாஸ்ட் சார்ஜ் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 இரட்டை சிம்,

சாம்சங் கேலக்ஸி எப்12 சாதனத்தில் இரட்டை சிம், 4ஜி, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்/ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!

.15,000-விலையில் அறிமுகம் செய்யப்பட

சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ரூ.15,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் இந்த புதிய சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.