அதிர்ச்சி.. நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா !!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் தெருக்களை அடைக்கும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 3986 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பேட்டை, செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதரப் பணியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க தொடர்பு கண்டறியும் (Contract Tracing) பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 41 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று மாவட்டத்தில் மொத்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.