அப்படி என்ன சொன்னார் ரோஹித்? – வைரலாகும் டேவிட் வார்னர் வீடியோ கமெண்ட்!

நாளை தொடங்குகிறது ஐ.பி.எல். திருவிழா. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே வார்னர் பதிவுக்கு ரோஹித்ஷர்மாவின் கமெண்ட செம வைரலாகிக்கொண்டிருக்கிறது.

ஐ.பி.எல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டேவிட் வார்னர் சென்னை வந்தடைந்துள்ளார். பிசிசிஐயின் உத்தரவின் படி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் 7 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன் அடிப்படையில் டேவிட் வார்னரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்னை வந்தடைந்தவர், இந்த குவாரண்டைன் நாள்களில் எப்படி பொழுதை கழிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு வார்னர் இன்ஸ்டாகிராமில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார்.இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “நான் நேற்று மதியமே சென்னை வந்துவிட்டேன்.

ஒரு நல்ல தூக்கத்துக்கு பிறகு இப்போது கண்விழித்துள்ளேன். அடுத்த 6 -7 நாள்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும். இந்த நாள்களை எப்படி செலவிடுவது. எனக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்த நாள்களை கடத்த கமெண்டில் எதாவது ஒரு ஐடியாவை கொடுங்கள். ஒரு ஜாலியான, குறும்புத்தனமான டாஸ்குகளை கொடுங்கள். தயவு செய்து எதையாவது ஒன்றை சொல்லுங்கள் எனகூறியிருந்தார்.

அவரது இந்த வீடியோவைக்கண்ட பலரும் பல ஐடியாக்களை கொடுத்தனர். டேவிடர் வார்னரின் வீடியோவுக்கு ரோஹித் ஷர்மா போட்ட கமெண்ட் தான் வைரலாகிகொண்டிருக்கிறது. அப்படி அவர் என்ன போட்டார் தெரியுமா?வார்னர் டிக்டாக் ரொம்ப மிஸ் செய்வார். புட்டபொம்மா பாட்ட கேட்டாலே இப்ப எல்லாம் வார்னர் நியாபகம்தான் வருகிறது. அந்த அளவுக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கிக் கொண்டிருந்தார் வார்னர்.

அதுமட்டுமல்லாது இப்போது ஃபேஸ் ஆப்பில் வேறு கலக்கி வருகிறார்.ரோஹித் ஷர்மாவின் அந்த கமெண்ட்டுக்கு பதிலளித்துள்ள வார்னர் நீங்க சொல்றதும் சரிதான். உங்களுடன் டூயட் பாடலாம் என நினைக்கிறேன் என ஜாலியாக ஒரு கமெண்டை தட்டிவிட்டுள்ளார் இது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

https://tamil.thesubeditor.com/news/cricket/30025-rohit-sharma-comment-on-david-warner-video.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.