கொரோனாவின் 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற 10-ந்தேதியில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பேருந்து பயணம், திருவிழா, திருமணம், இறுதிச் சடங்கு, வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் தவறால் கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.