அலர்ஜியால் நடிகர் பார்த்திபன் பாதிப்பு – Parthiban suffered due to allergy

அலர்ஜியால் நடிகர் பார்த்திபன் பாதிப்பு

07 ஏப், 2021 – 19:19 IST

சென்னை : கொரோனாவிற்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்ட நடிகர் பார்த்திபன் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் உரிய சிகிச்சைக்கு பின் அவர் தேறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்த நிலையில், அவர் ஓட்டு போடவில்லை. இதுகுறித்து சமூகவலைதளஙகளில் கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை கோவிட்19 தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டது. மருத்துவருக்கு போட்டோ எடுத்து அனுப்பி சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்பதிவை அவர் அழித்துள்ள நிலையில், ‛தனக்கு அலர்ஜி இருப்பதாலேயே பாதிப்பு ஏற்பட்டது. இது அனைவருக்கும் ஏற்படாது. எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும். அதனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.