ஆசஸ் ROG போன் 5 இந்தியாவில் அதன் முதல் விற்பனை ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளிப்கார்ட் வழியாகத் துவங்குகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கேமிங் போன் மூன்று தனித்துவமான மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான ROG போன் 5, ROG போன் 5 புரோ மற்றும் ROG போன் 5 அல்டிமேட் என்ற மூன்று மாடல்களில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாடல்களும் 144Hz சாம்சங் AMOLED டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளன, மேலும் அவை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றது.

புதிய ஆசஸ் ROG போன் 5 மாடல்கள்
புதிய ஆசஸ் ROG போன் 5 மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் விருப்பங்களில் வருகிறது. அதேபோல், ROG போன் 5 ப்ரோ 16 ஜிபி ரேம் மற்றும் ROG போன் 5 அல்டிமேட் 18 ஜிபி ரேம் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆசஸ் ROG போன் 5 சாதனத்தின் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்பொழுது பார்க்கலாம். இந்த சாதனம் ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

ஆசஸ் ROG போன் 5 இன் விலை என்ன?
ஆசஸ் இந்தியா வலைத்தளத்தின்படி , ஆசஸ் ROG போன் 5 இன் இரண்டு வகைகளும் ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கான விலை ரூ. 49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 57,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் பாண்டம் பிளாக் மற்றும் ஸ்டோர்ம் வைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

5 சதவீதம் கூடுதல் சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தற்போதைய நிலவரப்படி, விற்பனை சலுகைகளில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் நன்மையை வழங்குகிறது. அதேபோல், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனைப் எக்ஸ்சேஞ் சலுகை மூலம் பரிமாறிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.16,500 வரை தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இதன் மூலம் பயனர்கள் ரூ.16,500 வரை தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் நிறுவனம் ஆசஸ் ROG போன் 5 ப்ரோ மற்றும் அல்டிமேட் கேமிங் ஸ்மார்ட்போன்களையும் பட்டியலிட்டுள்ளது. ஆனால், இந்த வகைகள் எப்போது விற்பனைக்கு வருகின்றன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
OnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா? தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Asus ROG Phone 5 சிறப்பம்சம்
- 6.78′ இன்ச் 1080×2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
- 8 ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 11
- மூன்று பின்புற கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர்
- 65W பாஸ்ட் சார்ஜிங்
- 6000mAh பேட்டரி