ஹைலைட்ஸ்:
சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
‘மாமனிதன்’ திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக இளையராஜா பாடிய பாடல் நேற்று வெளியானது.
சீனு ராமசாமி
இயக்கத்தில் நான்காவது முறையாக
விஜய் சேதுபதி
நடித்துள்ள திரைப்படம் ‘
மாமனிதன்
‘. சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும்
யுவன் ஷங்கர் ராஜா
‘மாமனிதன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் முதல் பாடலாக ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்த்ல் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் சிங்கிளாக ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ பாடல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘மாமனிதன்’ திரைப்பட தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படமான ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடலை 7 ஆம் தேதி வெளியிடுகிறோம். அப்பாவிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது’ என பதிவிட்டிருந்தார்.
என்ன லிஸ்ட் பெரிசாகிட்டே போகுது: சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க வராத சினிமா பிரபலங்கள்..
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை’ பாடல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இசைஞானின்
இளையராஜா
தனது காந்த குரலில் பாடியுள்ள இந்த பாடல், கேட்போரின் மனங்களை வருடி வருகிறது. இளையராஜா, யுவன் காம்போவில் வெளியாகியுள்ள இந்த பாடல் தங்களுக்குள் மேஜிக்கை ஏற்படுத்துவதாகவும், கணக்கில்லாமல் இந்த பாடலை கேட்டு வருவதாகவும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்த பாடலின் மேக்கிங் வீடியோவில் விஜய் சேதுபதி, காயத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் ஒருசில கிளிப்களும் இடம் பெற்றுள்ளன. விஜய் சேதுபதி இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். சீனு ராமசாமி ஸ்டைலில் குடும்ப திரைப்படமாக ‘மாமனிதன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ‘தர்மதுரை’ திரைப்படம் போலவே இந்த திரைப்படமும் செம ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.