என்னது எனக்கு கொரோனாவா? நலம் விரும்பிகளுக்கு நடிகை அஞ்சலி விளக்கம்..

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.
திரையரங்கு இருக்கைகளுக்கு 50% சதவீதம் மட்டுமே அனுமதி.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு நடிகை அஞ்சலி மறுப்பு.

கொரோனா
தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் நடிகை
அஞ்சலி
, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார்.

ரன்பீர் கபூர், ஆலியா என பல பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த கொரோனா இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அக்ஷய் குமாருக்கும், அவரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய பல டெக்னிஷியன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது திரைத்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட ‘மாஸ்டர்’ பட இயக்குனர்
லோகேஷ் கனகராஜ்
, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது முழுவதுமாக நோயிலிருந்து மீண்டுள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொண்டதாகவும் பல பதிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான அஞ்சலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால், தன்னைதானே அவர் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி குறித்து தனது வலைத்தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை அஞ்சலி.

கங்கனாவை ரகசியமாக பாராட்டிய அக்ஷய்குமார்: மீண்டும் பாலிவுட் சினிமாவை வம்பிழுக்கும் கங்கனா..

அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், எனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததாகவும் எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் ஒருசில ஊடகங்களில் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அறிந்தேன். எனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்பது முழுக்க முழுக்க தவறான தகவல். நான் நலமாகவும் நல்ல உடல்நலத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும், மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க துவங்கி இருப்பதால் தமிழக அரசு ஒருசில கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. அதில் திரையரங்குகள் 50% சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.