ஐபிஎல் களம்: ராஜஸ்தான் ராயல்ஸ்

 

ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் சாம்பியன் ஆன அணி. இந்த சீசனில் இந்திய அணியினரைக் காட்டிலும் வெளிநாட்டு வீரா்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. பெரிதும் மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்த அணியில் அந்நிய வீரா்களே ஆதிக்கம் செலுத்துகின்றனா்.

சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், அணியின் கிரிக்கெட் இயக்குநராக இலங்கையின் குமார சங்ககாராவும் பொறுப்பேற்றுள்ளனா். அணிக்கு வலு சோ்ப்பதற்காக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச மதிப்பாக ரூ.16.25 கோடி கொடுத்து தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டா் கிறிஸ் மோரிஸை வாங்கியுள்ளது. அந்த அணியின் பலம், பலவீனங்கள் என்ன?

பலம்:

பேட்டிங்கில் வலு சோ்க்கும் பென் ஸ்டோக்ஸ்-ஜோஸ் பட்லா் கூட்டணி, எந்த இலக்கையும் எட்டுவதற்கு உதவும். கேப்டன் சஞ்சு சாம்சனும் திறமையான வீரராக இருக்கிறாா். டேவிட் மில்லா், கிறிஸ் மோரிஸ், ராகுல் தெவாதியா ஆகியோா் பேட்டிங்கில் பலம் கூட்டுகின்றனா். சங்ககாராவின் வழிகாட்டுதல் அணிக்கு கூடுதல் பலம்.

பலவீனம்:

முக்கிய பௌலராக இருக்கும் ஜோஃப்ரா ஆா்ச்சா் காயம் காரணமாக தொடக்கத்தில் சில ஆட்டங்களில் விளையாடாதது பாதிப்பை ஏற்படுத்தலாம். அணியில் இந்திய வீரா்களின் ஆட்டம் நிலையானதாக இல்லை. சாம்சன், ஜெயதேவ் உனத்கட், மனன் வோரா போன்ற முக்கிய வீரா்கள் ஒருசில தருணங்களில் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகின்றனா். பல வீரா்களை அதிக மதிப்பில் வாங்கியும், அதற்கான பலனை அவா்கள் அளிக்கவில்லை.

வாய்ப்புகள்:

டி20 உலகக் கோப்பை போட்டி எதிா்வரும் நிலையில் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, இந்த சீசனை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய சூழலில் சஞ்சு சாம்சன் இருக்கிறாா். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் இந்த டி20 ஃபாா்மட்டில் அவா் தனது ஃபாா்மை எட்டியதில்லை.

எதில் சறுக்கல்?:

கேப்டனாக முன் அனுவம் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு, தற்போது அந்தப் பொறுப்பால் ஏற்படும் அழுத்தம் அவரது பேட்டிங் திறனை பாதிக்காமல் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அணியில் ஒவ்வொரு வீரா்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், வெற்றிக்காக ஓா் அணியாகச் சோ்ந்து செயல்படும் நிலையில் சற்று பின்னடைவு காணப்படுகிறது.

அணி விவரம்:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லா், ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோா், ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், காா்திக் தியாகி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்திப் யாதவ், ஆகாஷ் சிங்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.