ஓபிஎஸ் மகன் காரை தாக்கிய அமமுக நிர்வாகியை விடுவித்தது போலீஸ்.. அதிமுக அதிர்ச்சி !!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான தேனி மக்களவைத் தொகுதி எம்பி ரவீந்திரநாத் குமார் வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று ஆய்வு செய்தார். தனது தந்தை போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வந்தார்.

அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி வாக்கினை பதிவு செய்த ரவீந்திர நாத் குமார் போடி சட்டமன்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது பெருமாள் கவுண்டர் பட்டியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குடிபோதையில் வழிமறித்து கற்களால் வாகனத்தை தாக்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத் குமார் தாக்குல் நடத்தி நபர்கள் திமுகவின் கட்சி துண்டை அணிந்திருந்தனர் என்று கூறினார். அவருடன் பயணித்த மற்றொரு வாகனமும் தாக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர், வாகனத்தை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆதரவாளர்கள் பெருமாள் கவுண்டன் பட்டியில் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஆனால் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தாக்குதலுக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பெருமாள்கவுண்டன்பட்டி கிராமம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மாயி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டபெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இன்று காலை கைது செய்யப்பட்ட மாயி மாலையில் விடுதலை செய்தனர். இதனால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

newstm.in
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.