கடைக்குள் 'காட்சில்லா'.. தாய்லாந்து சூப்பர் மார்க்கெட்டை… அலற வைத்த ஒற்றை உடும்பு… வைரல் வீடியோ

கடைக்குள் ‘காட்சில்லா’.. தாய்லாந்து சூப்பர் மார்க்கெட்டை… அலற வைத்த ஒற்றை உடும்பு… வைரல் வீடியோ

|

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் காட்சில்லா போல இருக்கும் மிகப்பெரிய உடும்பு ஒன்று, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது.

தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படம் காட்சில்லா vs கிங்காங். இந்த படம் வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் மிகப் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் காட்சில்லா போல இருக்கும் உடும்பு ஒன்று, அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

இணையத்தில் தற்போது தீயாகப் பரவும் இந்த வீடியோ தாய்லாந்து நாட்டில் உள்ள செவன்-லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உடும்பு ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருந்த பொருட்களைத் தள்ளிக்கொண்டு மேல் ஏறுகிறது. பின்னர், அங்கேயே அது சற்று நேரம் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த பலரையும் இந்த உடும்பு மிரள வைத்துவிட்டது. முதலில் இதைக் கண்டதும் முதலை தான் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்துவிட்டது என அஞ்சி, பலரும் அச்சத்தில் உறைந்துவிட்டனர். அங்கிருந்தவர்களின் அலறல் சத்தமும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பொதுவாக உடும்புகள் பல வகைப்படும். அதில் ஒரு வகைதான் மிகப் பெரிதாக வளரும் இந்த ‘மானிட்டர் லிசார்ட்’. இவை 2.6 மீட்டரும், 79 முதல் 91 கிலோ வரையிலும் வளரும். அதிகபட்சமாக 20 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் கொண்டது.

இந்த வகை உடும்பு, தாய்லாந்து முழுக்க பல்வேறு இடங்களில் எளிதாகக் காண முடியும். இவை அழுகிய விலங்குகளின் இறைச்சியை உட்கொள்ளும் பழக்கம் கொண்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.