கொரோனாவிலிருந்து மீண்ட பிரபல தமிழ் நடிகை ரசிகர்களுக்கு நன்றி… புதிதாய் பிறந்தது போல உணர்கிறேன்!

|

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் மகளாக நடித்து இருப்பார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிவேதா அதிலிருந்து மீண்டதற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக

ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம், சிவமயம்,அரசி உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை நிவேதா தாமஸ் இப்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்யின் குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் போராளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

குணச்சித்திர வேடங்களிலும்

குணச்சித்திர வேடங்களிலும்

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக வலம் வரும் அதே சமயம் ஜில்லா மற்றும் சமீபத்தில் வெளியான தர்பார் உள்ளிட்ட படங்களில் தங்கை,மகள் என குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்தியை தொடர்ந்து தமிழிலும் மாபெரும் வெற்றிபெற்ற நேர்கொண்ட பார்வை தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் பவன் கல்யாண் ஹீரோவாகவும் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாசிடிவ்

கொரோனா பாசிடிவ்

கடந்த ஓராண்டாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்க சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை நிவேதா தாமஸுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாசிடிவ் என வந்ததை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ரசிகர்களுக்கும் நலம்விரும்பிகளுக்கும்

ரசிகர்களுக்கும் நலம்விரும்பிகளுக்கும்

இந்த நிலையில் தனிமைப் படுத்திக் கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிவேதா தாமஸ் இப்போது அதிலிருந்து மீண்டுள்ளார். இந்த நற்செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சூரிய வெயில் முகத்தில் சுல்லென அடிக்க படுக்கை அறையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு புதிதாய் பிறந்தது போல புன் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் குணமடைய வேண்டுமென பிரார்த்தித்த அனைத்து ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.