சிக்கலில் ப்ளூ சட்டை மாறன் – ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை ஏன்?

இணையத்தின் அபரீத வளர்ச்சி காரணமாக பலரும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல் வழியாக படங்களை விமர்சித்து புகழ்பெற்றவர் ப்ளூ சட்டை மாறன் எனப்படும் சி.இளமாறன். இவர் அந்தந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்து விமர்சித்து தனது யூடியூப் சேனலில் வெளியிடுவார். அப்படி வெளியிடும் போது, நிறை குறைகளை பட்டியலிட்டு, அவருக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தும் பேசுவது வழக்கம்.

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் என்பதால், ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இதையடுத்து படும் ஏப்ரல் 5 ம் தேதி சென்சார் போர்டுக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்தை வெளியில் விட முடியாது என முட்டுக்கட்டை போட்டு, படம் வெளியாவதற்கு தடை விதித்துள்ளனர்.

சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்’ என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

https://tamil.thesubeditor.com/news/cinema/30021-blue-sattai-maran-movie-banned.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.