தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை.. சாப்பிட்டு முடித்ததும் நடந்த கொடூரம் !

சென்னை நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரம்மதேவன் என்பவரின் மகன் நாராயணன்(23). இவர் பாலிடெக்னீக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து, தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாட அண்மையில் சென்னை வந்திருந்தார்.

இந்த நிலையில், நாராயணன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது தந்தையான பிரம்மதேவனும் உடன்சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் நாராயணனை சுற்றிவளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றப்போதும், தந்தை கண் முன்னே நாராயணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது அந்த கும்பல்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து நாராயணனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நாராயணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி தனன் ஜெயன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், தனன் ஜெயன் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பலே நாராயணனை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை கண் எதிரே மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.