தமிழக பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி  சட்டமன்ற தேர்தல்  நடைபெற்று முடிந்தது.பொதுமக்களின் வசதிக்காகவும், தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும்  வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இருப்பினும் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி முதல்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணி  தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து பள்ளிகளிலும்  அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உட்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.