துரை முருகனுக்கு கொரோனா: தடுப்பூசி பயனளிக்கவில்லையா?

ஹைலைட்ஸ்:

துரைமுருகனுக்கு கொரோனா உறுதி
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்!
தடுப்பூசி போட்டும் பலனளிக்கவில்லை!

திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு
கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சென்னை கோட்டூர்புர இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

82 வயதான
துரைமுருகன்
அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டதால் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மக்களை நேரடியாக சந்தித்துப் பேச வேண்டிய சூழல் நிலவியது.

தமிழ்நாட்டில் அறிவிக்க உள்ள கட்டுப்பாடுகள்: சென்னையில் நடைமுறைக்கு வந்த சோதனை!

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரைமுருகன் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டார். இதனால் பயமில்லாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்கள் அவரை சோதித்த பின்னரே வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்வாரா அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது தெரியவரும்.

சசிகலா விவகாரம்: எடப்பாடியை கட்டிப்போட்ட அந்த நபர்!

திமுக
மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொரோனாவால் அண்மையில் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.