நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது


திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டித்திடல் பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தோப்பூர் – பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டில் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி 2 கிலோகிராம், தேவாங்கு இறைச்சி 1 கிலோகிராம் மற்றும் 2 கத்திகள் என்பனவும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் சிக்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.