நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு குட்நியூஸ்!

நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெற தொடங்கியுள்ளன. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனானது டிசம்பர் 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 9 பை உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு அக்டோபர் 2019 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்தது. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனானது டிசம்பர் 2019 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 9 பை மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை பெற்றது.

எச்எம்டி குளோபல் தகவல்

எச்எம்டி குளோபல் தகவல்

இந்த நிலையில், நோக்கியா உரிமதாரர் ஆன எச்எம்டி குளோபல் தகவலின்படி இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆண்ட்ராய்டு புதுப்பிப்பை பெறும். உலகின் பிற பகுதிகளுக்கு எப்போது புதுப்பிப்பு கிடைக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெறும் எனவும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு நாடுகளில் இந்த அப்டேட் கிடைக்கும் என எச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கையில், இதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். நோக்கியா 2.3 மாடலுக்கான ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பானது பிலிப்பைன்ஸ், இலங்கை, ஸ்வீடன் மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் அப்டேட்

விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் அப்டேட்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான 10 சதவீத யூனிட்கள் உடனடியாக அப்டேட் பெறும் எனவும் 50% யூனிட்டுகள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் புதிப்பிப்பை பெறும் எனவும் மீதமுள்ள சாதனங்கள் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் புதுப்பிப்பை பெறும் எனவும் நோக்கியா தெரிவித்துள்ளது.

4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன்

4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன்

நோக்கியா 8.1 சாதனம் 6.18 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2246 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. இநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (டூயல் 2.2 GHz + ஹெக்ஸா 1.7 GHz) கெர்யோ 360, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 616 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 400 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.

12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா

12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.