பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரபலங்கள் எடுத்த இந்த போட்டோவை பார்த்தீர்களா?

விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன்-தம்பிகள் எப்படி பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 500 எபிசோடை கடந்துவிட்டது.

இந்த சீரியலில் நடிகர்களின் மாற்றம் எதுவும் நடக்கவில்லை, சித்ரா மறைவிற்கு பின்னால் முல்லை வேடத்திற்கு மட்டும் காவ்யா என்கிற நடிகை நடிக்க வந்தார்.

மற்றபடி எந்த மாற்றமும் இல்லை, வெற்றிகரமாக ஓடுகிறது. இன்னும் சில நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் வரப்போகின்றன.

இந்த நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சூப்பர் புகைப்படம் வந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகள் அனைவரும் சீரியலின் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.