பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டது மறக்க முடியாத தருணம்! செவிலியர்கள் பேட்டி

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதனையடுத்து  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு மூலம்  கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி செலுத்தி கொண்டார்.  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்கள் கழித்து 2வது டோஸ் எடுத்து கொள்ளும் வகையில் இன்று 2வது டோஸை செலுத்தி கொண்டார்.  கொரோனாவை கட்டுப்படுத்த  தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒன்றே எளிமையான வழி என இதனால் தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி  தெரிவித்து உள்ளார்.

இன்று பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்த புதுச்சேரியை சேர்ந்த பி. நிவேதா மற்றும் பஞ்சாப்பின் நிஷா சர்மா ஆகிய இரு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.  அவர்கள் முறைப்படி பிரதமருக்கு 2வது டோசை செலுத்தினர்.

அவர்களில் நிஷா சர்மா, பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தியதும் மறக்க முடியாத தருணம் என தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். பிரதமருக்கு முதல் டோஸ் போட்ட நிவேதா  பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தினேன்.  அதனால் மகிழ்ச்சி அடைந்தேன் பிரதமர்  எங்களுடன் பேசியதோடு எங்களுடன்  சேர்ந்து புகைப்படங்களும் எடுத்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.