பிரா சைஸ் என்னன்னு கேட்ட நெட்டிசன்.. உன் சைஸ் என்னன்னு நான் கேட்கட்டா என வெளுத்து வாங்கிய நடிகை!

By Mari S

|

மும்பை: பிரா சைஸ் என்னன்னு கேட்ட நெட்டிசனை விட்டு விளாசி உள்ளார் பிரபல டிவி நடிகை சயாந்தனி கோஷ்.

விஜய் டிவியில் வெளியான லேட்டஸ்ட் மகாபாரதம் சீரியலில் சத்யவதியாக நடித்து பிரபலமானவர் நடிகை சயாந்தனி கோஷ்.

கும்கும், நாகினி உள்ளிட்ட சீரியல்களிலும் லீடு ரோலில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் இவர்.

சயாந்தனி கோஷ்

கொல்கத்தாவை சேர்ந்த நடிகை சயாந்தனி கோஷுக்கு 36 வயதாகிறது. கடந்த 2006ம் ஆண்டு வெளியான கும்கும் சீரியலில் அறிமுகமாகி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். கிரைம் பேட்ரோல், நாகினி, மேரி மா, பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர், மகாபாரதம், நாகினி 4 என ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மகாபாரதம் சீரியலில்

மகாபாரதம் சீரியலில்

ஸ்டார் பிளஸ்சில் வெளியான மகாபாரதம் சீரியல் தமிழில் விஜய் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது. அந்த சீரியலில் சாந்தனு மகாராஜாவின் காதல் மனைவியான சத்யவதியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை இவர் ஈர்த்துள்ளார்.

பிரா சைஸ் என்ன

பிரா சைஸ் என்ன

பிரபல நடிகைகள் அதிகளவில் இந்த கேள்வியால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நடிகைகள் போட்டோக்களை போட்டாலே அவர்களது மார்பழகை வர்ணிக்கும் ரசிகர்கள், அவர்களின் பிரா சைஸ் குறித்த கேள்வியையும் கேட்டு டென்ஷன் ஆக்கி வருகின்றனர்.

வெளுத்து விட்டாச்சு

வெளுத்து விட்டாச்சு

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை சயாந்தனி கோஷ் பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் இந்த கேள்வியை கேட்க, மிகவும் கடுப்பான அவரை வெளுத்து வாங்கி உள்ளார். மேலும், அந்த விவகாரத்தை பற்றி யோசித்த அவர், அது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நீண்டதொரு போஸ்ட் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மனநலம் முக்கியம்

மனநலம் முக்கியம்

உலக சுகாதார தினம் நேற்று ஏப்ரல் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது. உடல் சுகாதாரத்தை மட்டுமின்றி மனநலமும் முக்கியம். இங்கே பலருக்கும் மூளை சரியாக இயங்க மறுக்கின்றது என அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சயாந்தனி கோஷ் வெளுத்து வாங்கி உள்ளார்.

உன் சைஸ் என்ன?

உன் சைஸ் என்ன?

பெண்களை பார்த்தால் உடனடியாக உங்க பிரா சைஸ் என்னன்னு கேட்கும் ஆண்களே, பதிலுக்கு பெண்கள் உங்கள் ஆண் குறியின் சைஸ் குறித்து கேட்டால் ஆடிப் போய் விடுவீர்கள். பெண்களின் உடலமைப்பை இன்னொரு உடலமைப்பாக எப்போது தான் பார்க்கப் போறீங்களோ என்றும் தனது நீண்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கும் அட்வைஸ்

ஆண்கள் மட்டுமல்ல பல பெண்களும் இதே மன நிலையில் தான் இருக்கிறார்கள் என்றும், எனது மார்பகத்தை விடாமல் பார்க்கும் பல ஆண்களிடம் எதிர்த்து பேசாமல் வாயடைத்து மெளனியாக நானும் இருந்துள்ளேன். இனியும் பெண்கள் இது போன்ற நபர்கள் முன்னால் அமைதி காக்க வேண்டாம் என்று பெண்களுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.