யாழில் அரசியல்வாதிகள் பெயரை பயன்படுத்தி அரச உத்தியோகத்தரின் கீழ்த்தரமான செயல்; மாட்டிவிட்ட யுவதியால் நேர்ந்தகதி

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க லஞ்சம் கோரிய சந்தேகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியை சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் அங்கஜன் இராமநாதனின் தரப்புடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர், அங்கஜன் இராமநாதனின் பெயரைச் சொல்லி, அவரை உங்களுக்கு பிடிக்கும் என கூறி அவருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதாக பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தை, அந்த யுவதி, அங்கஜன் இராமநாதனின் அணியிலுள்ள ஒருவருக்கு தெரிவிக்க, அவர் அங்கஜன் இராமநாதனிடம் அதனை தெரிவித்ததையடுத்து, அந்த நபரை மடக்கும் ஏற்பாடுகள் நடந்தன.

ஆசாமியுடன் தொடர்ந்து பேசுமாறு யுவதியை அறிவுறுத்தி, சாதுரியமான முறையில் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மடக்கிப் பிடித்த நபரை பொலிசாரின் உதவியுடன் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.