ரூ. 236 கோடி பணம்; 2.90 லட்சம் லிட்டர் மதுபானம் – தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை தமிழக முழுவதும் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம், பொருள்களைப் பறிமுதல் செய்து வந்தது தேர்தல் ஆணையம்.

தமிழக தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி வரை தமிழக தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பணம், மதுபானம்

ரொக்கமாக ரூ.236.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 2,90,284.13 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 5.27 கோடி ரூபாய் எனக் கணிக்கிடப்பட்டிருக்கிறது.

போதைப் பொருள்கள்

2.20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

பறிமுதல்

நகைகள்

8.15 சென்ட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய். 5,22,318.72 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 173.19 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 731.03 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. வெள்ளிப் பொருள்களின் மொத்த மதிப்பு 3.17 கோடி ரூபாய்.

Also Read: அதிமுக எம்.எல்.ஏ-வின் டிரைவர் வீட்டில் பண மூட்டை; ரூ.1 கோடி பறிமுதல் – அதிரவைத்த ஐடி அதிகாரிகள்!

மற்றவை!

ரூ. 1.95 கோடி மதிப்பிலான சேலை உள்ளிட்ட துணிமணிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 23.14 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்டாப், குக்கர், குடம் உள்ளிட்ட மற்ற பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 55 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

பணம், நகை, மதுபானங்கள், பொருள்கள் எனத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பெருமொத்த மதிப்பு ரூ. 446.28 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.