விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

2400 x 1080 பிக்சல் தீர்மானம்

2400 x 1080 பிக்சல் தீர்மானம்

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனில் 6

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். குறிப்பாக பேண்டஸி, சில்வர், பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

என்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்!என்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்!

மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர்

மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர்

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார்

64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார்

ரியல்மி ஜிடி நியோ சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரைவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே 16 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஃபை 6 802.11 ax, புளூடூத்

இரட்டை சிம் 5ஜி, வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன். பின்பு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி ஜிடி நியோ விலை

ரியல்மி ஜிடி நியோ விலை

இந்திய மதிப்பில்..

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,145-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,390-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,750-ஆக உள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.