துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் காரின் மீது வாக்குப்பதிவு தினத்தன்று தாக்குல் நடத்தப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியது யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி வாக்கினை பதிவு செய்த ரவீந்திர நாத் குமார் போடி சட்டமன்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது பெருமாள் கவுண்டர் பட்டியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குடிபோதையில் வழிமறித்து கற்களால் வாகனத்தை தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத் குமார் தாக்குல் நடத்தி நபர்கள் திமுகவின் கட்சி துண்டை அணிந்திருந்தனர் என்று கூறினார். அவருடன் பயணித்த மற்றொரு வாகனமும் தாக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர், வாகனத்தை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக ஆதரவாளர்கள் பெருமாள் கவுண்டன் பட்டியில் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஆனால் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தாக்குதலுக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பெருமாள்கவுண்டன்பட்டி கிராமம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மாயி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in