வைரலாகும் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை அமலாக்கி வருகின்றன. 
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது உதவியாளர் மனிஷ் சிசோதியா ஆகியோர் முகக்கவசம் அணியாமல் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறுவனுக்கு முகக்கவசம் அணிவிக்கிறார்.
 வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
`அவரே முகக்கவசம் அணியவில்லை, ஆனால் மற்றவர்களை முகக்கவசம் அணிய வைக்கிறார். அவர் இசட் பிரிவு பாதுகாப்பு மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக் கொள்கிறார்,’ எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நவம்பர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படம் டெல்லி பள்ளியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோதியா இணைந்து மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய போது எடுக்கப்பட்டது ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.