ஸ்கூல் கட் அடிக்க போலி கொரோனா சான்றிதழ்.. மாணவர்கள் செய்த சேட்டை!

ஹைலைட்ஸ்:

போலி கொரோனா சான்றிதழ் வைத்து பள்ளியை கட் அடித்த மாணவர்கள்.
ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம்.

கொரோனா காலகட்டத்தில் பள்ளி வகுப்புகளை கட் அடிக்க நூதன முறையை கையாண்டுள்ளனர்
சுவிட்சர்லாந்து
நாட்டை சேர்ந்த மாணவர்கள்.
சுவிஸ்
நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.

நிர்வாணமாக போஸ் கொடுத்த அழகிகள்.. வசமாக சிக்கிய போட்டோகிராபர்.. அரசு எடுத்த முடிவு!

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கொரோனா பாசிட்டிவ்
போலி
சன்றிதழ் பெற்று பள்ளி வகுப்புகளை கட் அடித்துள்ளனர் சில சேட்டை பிடித்த மாணவர்கள்.

சுவிஸ்ஸில் உள்ள பெசல் கிர்ஸ்கார்டன் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர்களின் ஏமாற்று வேலையை கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பெசல் கல்வித் துறையின் செய்தித்தொடர்பாளர் சைமன் திரியெட் பேசியபோது, “இது மாணவர்களின் குறும்பு வேலை இல்லை. இதுவொரு சீரியஸான சம்பவம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாஸ்க் போதும்.. ஓவர்நைட்டில் பணக்காரர் ஆகிடலாம்.. உங்ககிட்ட இருக்கா?

போலி
கொரோனா சான்றிதழ்
பெற்று பள்ளியை கட் அடித்த மாணவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனினும், மாணவர்களை பள்ளியை விட்டு நீக்க திட்டமில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், இதுபோன்ற மோசமான செயல்களை சும்மா விட முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.