20லட்சம் கடன் ஆனந்த கண்ணீரில் பெற்றோர் – 14 தங்கபதக்கங்களை குவித்த விவசாயி மகன்!

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இவர்கள் இருவரும் இணைந்து, சுமார் அப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். விவசாயிகளான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் பெயர் பிரசாந்த். மகன் பிரசாந்த் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் பி.எஸ்.சி தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்தார். அவரது பெற்றோர் பெரும் இன்னல்களுக்கு நடுவே பிரசாந்தை படிக்க வைத்துள்ளனர். பிரசாந்தின் தந்தைக்கு வங்கியில் ரூ.2.40 லட்சம் கடன் உள்ளது.

தனது பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொண்ட பிரசாந்த், படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்க கூடியவர். நன்றாக படித்து வந்தவர் அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தனது மகன் பட்டம் பெறுவதை பார்த்த தாயும், தந்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர். பிரசாந்த் பதக்கங்களை பெற்றதும் அவரது தாய் வசந்தாவும், தாத்தா சென்னேகவுடாவும் மேடையில் ஏறி அவருக்கு முத்தமழை பொழிந்தனர். மேலும் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர்.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், “எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் பாரம்பரியமாக ஒரே பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள். மேலும் எனது படிப்புக்காக எனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன் என்றார்.

https://tamil.thesubeditor.com/news/india/30015-farmer-son-got-gold-medal.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.