பூடானில் மக்கள் தொகையில் 60% கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ பூடானில் 9 நாட்களுக்கு முன்னர் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மார்ச் 27 ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்து பணியை பூடான் தொடங்கியது.
முதல் இலக்காக 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதை இலக்காக கொண்டு பூடான் அரசு செயல்பட்டது. கரோனா தடுப்பு மருந்தில் தாய்மார்கள், கர்பிணிகள், அலர்ஜி உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 7,70,000 மக்கள் தொகைக் கொண்ட பூடானில் 4,70,00 பேருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக பூடான் அரசு தெரிவித்துள்ளது.
பூடானில் கோவிஷில்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. பூடானில் இதுவரை 900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.