இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை !!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி அச்சுறுத்தி வருகின்றனர். எனினும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை.

இந்தியாவுக்கு மருந்து, ஆக்சிஜன் அளித்து பல்வேறு நாடுகள் உதவிகரம் நீட்டி வருகிறது. அதேநேரத்தில் பரவி வரும் கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இதையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது. தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.