கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனிநபர் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி..!

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவில் உள்ள தனிநபர்கள் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது, காட்டுத்தீ போல கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்திய முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த திணறிவருகிறது. இதனால் பல வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உதவிகள் இந்தியாவுக்கு கிடைத்து வருகிறது. ஆனால் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்க படாததால் அதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவசர தேவைக்காக வரும் ஜூலை 31-ம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இணையவழி வர்த்தக நிறுவனம் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசு பொருட்கள் இறக்குமதி என்ற பிரிவின் கீழ் சுங்கத்துறை இதற்கு அனுமதி அளிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.