தொடர்ந்து 2 நாட்கள் திறக்கத் தடை: நெல்லையில் இன்று இறைச்சி கடைகள் மூடல்..! டோர் டெலிவரி செய்த வியாபாரிகள்

நெல்லை: இறைச்சிக்கடைகள் இன்று முதல் 2 நாட்களுக்கு நெல்லையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வியாபாரிகள் தங்களது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவெரி செய்தனர். பலர் நேற்றே இறைச்சி வாங்கி சென்றனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொத்த பாதிப்பில் 50 சதவீதம் அளவிற்கு மாநகரில் வைரஸ் பாதித்தவர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக தினமும் 650 முதல் 850 பேர் வரை புதியதாக வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் கொரோ னா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வருகின்றன. இந்த வாரம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளை மூடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி நெல்லையில் இன்று காலை வழக்கமாக திறக்கப்படும் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மீன்கடைகளும்  மூடப்பட்டிருந்தது தெரியாமல் இறைச்சி வாங்க வந்த பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். சில இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் தங்களது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் இறைச்சி, மீன்  வகைகளை ஆர்டருக்கு ஏற்ப டோர் டெலிவரி செய்தனர். இதனிடையே 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மாலை பல இறைச்சிகடைகளில் வழக்கத்திற்கு அதிகமாக விற்பனை நடந்தது. மூடப்பட்டுள்ள இறைச்சிக்கடைகளை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.