வேலூரில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, குழந்தையுடன் உயிரிழப்பு; மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை உயிரிழந்தாகக் குற்றம் சாட்டி, மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்‍.

போலிப்பாக்கத்தை சேர்ந்த மகாலட்சுமி பிரசவத்திற்காக சத்துவாச்சேரியில் உள்ள சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‍.

நேற்றிரவு மகாலட்சுமிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்னர் சிறிது நேரத்தில் மகாலட்சுமியும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‍.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.