அமெரிக்காவில் இருவர் சுட்டுக்கொலை| Dinamalar

கிரீன் பே:அமெரிக்காவின் விஸ்கான் மாகாணத்தில் உள்ள உணவகத்தில், இருவரை, மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார்; அவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவின் விஸ்கான் மாகாணத்தில், மேற்கு கிரீன் -பே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், நேற்று இரவு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த இருவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில், மேலும் ஒருவர் காயமடைந்தார்.உடனடியாக அந்த மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் குறித்த அடையாளம், உடனடியாக தெரியவில்லை.இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அங்கு வந்து ஒருவரை தேடியுள்ளார். அவர் இல்லாததால், அவரது நண்பர்கள் மீது, இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்; விசாரணை தொடர்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.