ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சகல பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் பிரகாரம் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் மறு அறிவித்தல் வரை சேவைகள் இடம்பெறாதென ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் நாடு பூராகவும் உள்ள பிரதேச செயகலங்களிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் காரியாலயங்கள் ஊடாக விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

தேசிய அடையாள அட்டையைப் பெற நேர காலத்தை ஒதுக்கிக் கொண்ட சகல விண்ணப்பதாரிகளுக்கும் அடையாள அட்டைகளை அன்றைய தினம் அல்லது அதற்குப் பின்னர் தபால் மூலம் அனுப்பப்படும். பரீட்சை, நேர்முகத் தேர்வு போன்ற அவசரத் தேவைகளுக்காக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் தொலைபேசி மூலம் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.

இதற்கான தொலை பேசி இலக்கங்கள்: 

தலைமை அலுவலகம்                      தொலை பேசி இல.       0115 226 126 /115226100
தென் மாகாண அலுவலகம்            தொலை பேசி இல.       0912 228 348
வட மேல் மாகாண அலுவலகம்     தொலை பேசி இல.       0372 224 337
கிழக்கு அலுவலகம்                           தொலை பேசி இல.       0652 229 449
வட மாகாண அலுவலகம்                தொலை பேசி இல.        0242 227 201

அவ்வாறான விண்ணப்பதாரிகளுக்கு விரைவாக அடையாள அட்டை விநியோகிக்கப்படுமென ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.