இறங்கி அடிக்கும் தங்கம் விலை.. அடுத்த வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தினை பொறுத்தவரையில் 5 நாளில் நான்கு நாட்கள் சரிவில் காணப்பட்டது.

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தொடர்ந்து கடந்த ஏழு அமர்வுகளாக சரிவினைக் கண்டுள்ளது. இதே ஆபரண சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக 9 நாளில், 8 நாட்கள் சரிவிலும், ஒரு நாள் விலையில் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இதுவே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 9,400 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, கடந்த சில தினங்களாகவே மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தங்கத்தின் தேவை

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகளும் ஆங்காங்கே அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டினை காட்டிலும் தற்போது தான் தேவை மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஒரு நாள் ஏற்றம் கண்டிருந்தாலும், தொடர்ச்சியாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 1778 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1789.85 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்றே 1754.85 டாலர்களை குறைந்தபட்சமாக தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 1768.60 டாலர்களாக முடிவுற்றது. வரும் வாரத்திலும் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்
 

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் கடந்த மூன்று அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வருகிறது. முதல் இரண்டு நாட்கள் சற்று ஏற்றம் கண்டாலும், அடுத்த மூன்று நாட்கள் சற்று சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 26.045 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 26.545 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. எனினும் அன்றே குறைந்தபட்சமாக 25.735 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 25.915 டாலர்களாக முடிவுற்றது. வரும் வாரத்தில் வெள்ளி விலையானது நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,604 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 47,650 ரூபாயினை தொட்டது. குறைந்தபட்சமாக வியாழக்கிழமையன்று 46,462 ரூபாயாக குறைந்திருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 46,737 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 867 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து, 9,400 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்தே வாங்கலாமா வேண்டாமா? என்பதை தீர்மானிக்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இதே போல் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 69,086 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 69,437 ரூபாயினையும் தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 66,971 ரூபாயினையும் தொட்டுள்ளது. எனினும் முடிவில் 67,524 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 1,562 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,170 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக சரிவில் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 33,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4,410 ரூபாயாகவும், சவரனுக்கு 35,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றோடு தொடர்ச்சியாக தங்கம் விலையானது எட்டு நாட்கள் சரிவிலும், இரு நாட்கள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. இது தங்கம் வாங்க சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,300 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகிறது. இது கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 44,650 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 46,100 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது, 500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 72.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 728 ரூபாயாகவும், கிலோவுக்கு 72,800 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 72,800 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகின்றது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் திருமண முகூர்த்தம், அறுவடை, தேவை சரிவு பல காரணிகள் கவனிக்க வேண்டியுள்ளது. ஆக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இது தங்க ஆர்வலர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், இனி அடுத்து வரும் வாரங்களில் பத்திர லாபத்தினை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் அடுத்து வரும் நாட்களில் பத்திர லாபத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட, தங்கம் விலையில் பெரும் மாற்றத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தடைகள் வருமோ?

புதிய தடைகள் வருமோ?

இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, புதிய தடைகள், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், என்ற கவலையும் நீட்டித்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான ஆர்வம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் நகை விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடைகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு எதிராக உள்ளது. எனினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்க இது நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.