உழைப்பாளர் தினத்தில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு மரியாதை செலுத்திய விஜய் சேதுபதி!

|

சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு லாபம் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பிஸியாக உள்ளார்.

கோலிவுட்டில் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஒரு நடிகராகவும் உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

கடைசியாக லாபம்

ஏற்கனவே எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. கடைசியாக மீண்டும் அவரது இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எடிட்டிங் பணியின் போது

எடிட்டிங் பணியின் போது

கடந்த மாதம் இப்படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன், இடைவேளைக்காக வீட்டிற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

மூளைச்சாவு

மூளைச்சாவு

அப்போது சுயநினைவின்றி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த எஸ்பி ஜனநாதனை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எஸ்பி ஜனநாதன் மரணம்

எஸ்பி ஜனநாதன் மரணம்

தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி காலை இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

எஸ்பி ஜனநாதனின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் விஜய் சேதுபதி, அவரது இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்கியப்படியே பங்கேற்றார். இந்நிலையில் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எஸ்பி ஜனநாதனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து லாபம் படக் குழுவினருடன் சேர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

ரசிகர்கள் லைக்

ரசிகர்கள் லைக்

மரியாதை செலுத்தும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜய் சேதுபதி, உழைப்பாளர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.