நடிகர் தனுஷ் நடிப்பில், கடந்த மாதம் 50% பார்வையாளர்கள் அனுமதியோடு வெளியானாலும், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது ‘கர்ணன்’ திரைப்படம். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த படத்திற்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் ரீமேக்காக எடுக்க உள்ளனர். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் “கொடியன்குளம்” என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் தன்னுடைய வெறித்தனமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல்.. ஒவ்வொரு கதாபாத்திரமும், கர்ணன் வெற்றியின் மகுடத்திற்கு நவரத்தினங்கள் பொருந்தியது போல், பொருத்தமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் தேடி செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை… கொண்டாடி அனுபவித்த தனுஷ், மீண்டும் ‘கர்ணன்’ பட இயக்குனர், மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த, அதிகார பூர்வ தகவலையும் தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ‘கர்ணன்’ பட ரீமேக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘கர்ணன்” படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான… ‘அசுரன்’ படம் ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, இதை தொடர்ந்து, ‘கர்ணன்’ படம் ரீமேக் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.