குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்.. பெஸ்ட் ஆப்சன் இதோ..!

இன்றைய காலகட்டத்தில் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் பெற்றோரின் எண்ணமாக இருக்கும்.

ஆனால் பலரும் சேமிக்க நினைத்தாலும் எப்படி செய்வது? எந்த திட்டத்தில் முதலீடு செய்வது? முதலீடு செய்ய சிறந்த திட்டங்கள் என்னென்ன? அதில் எப்படி இணைவது? எவ்வளவு லாபம் கிடைக்கும்? குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டம் எது என்று பலருக்கும் தெரிந்திருப்பது இல்லை.

ஆக அப்படி நினைவர்களுக்கான கட்டுரை தான் இது. அந்த வகையில் இன்று ஐந்து சிறந்த திட்டங்களை பற்றித் தான் பார்க்க இருக்கின்றோம்.

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம், அவர்களின் பிறப்பு முதல் 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட அரசின் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)

எஸ்ஐபி எனும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான், மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டினைத் தான் எஸ்ஐபி என்கிறோம். சிறு துளி பெருவெள்ளம் என்பது நாம் சேமிக்கும் சிறிய தொகை பின்னாளில் பெரிய தொகையாக மாறும். அதோடு மிகச் சிறிய தொகை என்பதால், யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம்.

SIPல் எதில் முதலீடு
 

SIPல் எதில் முதலீடு

மியூச்சுவல் பண்டுகளில் எஸ்ஐபி முறையில் அனைத்து வகையான சொத்துகளிலும் முதலீடு செய்து கொள்ளலாம். குறிப்பாக பங்கு சந்தை, கடன் சந்தை, தங்கம் வெளிநாட்டு பண்டுகள் என எதில் வேண்டுமானலும் முதலீடு செய்து கொள்ளலாம். உங்களின் நீண்டகால தேவைக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்பிஐ முறையில் முதலீடு செய்யலாம்.

கடன் ஃபண்டுகள்

கடன் ஃபண்டுகள்

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாக பாதுகாப்பான முதலீடு என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்ற ஒரு திட்டம். இதில் வருமான வரி சலுகையும் உண்டு. அதோடு இந்த ஃபண்டுகளை ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி கிடையாது. இந்த திட்டத்தினை பொறுத்தவரை எத்தனை நாட்களுக்கு இந்த ஃபண்டை வைத்திருக்கிறோமோ? அவ்வளவு வருமானம் இருக்கும் என்பது தான்.

எந்த ஃபண்டுகள்

எந்த ஃபண்டுகள்

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் வங்கி டெபாசிட் மாதிரி கட்டாயம் இத்தனை வருடங்கள் வைத்திருந்தால் தான் வருமானம் என்பது இதில் கிடையாது. அது எல்லாவற்றையும் விட பங்கு சார்ந்த திட்டங்கள் போல, இதில் என்ஏவியும் அதிகம் மாற்றம் காணாது. இந்த ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்யுற காலத்தினை வைத்து இதனை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று ஷார்ட் டெர்ம் டெப்ட் ஃபண்ட், மீடியம் டெர்ம், லாங் டெர்ம் ஃபண்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

உங்களின் தேவை என்ன?

உங்களின் தேவை என்ன?

ஆக நாம முதலீடு செய்யணும் நினைக்கும்போது இதில் தான் செய்யப்போறோம். இவ்வளவு காலத்துக்குள்ள, நம்ம பணம் நமக்கு வேணும் என்று தீர்மானித்து இதில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு வரும் காலத்துல நீங்க ஒரு வீடு வாங்கவோ அல்லது திருமணத்திற்காக சேமித்து வைக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஏற்ற திட்டம் இது தான். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பிக்ஸ்டு டெபாசிட், பாண்டுகள், அரசு கடன் பத்திரங்கள் இம்மாதிரியானவற்றில் தான் முதலீடு செய்வாங்க. பொதுவா நாங்க எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பல, நான் இப்பதான் புதிதாக முதலீடு செய்யப்போறேன். வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த ஃபண்ட் ஏற்றது.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் என்பது சுத்தமான பாதுகாப்புத் திட்டம் என்றும் அறியப்படுகிறது. ஒருவரின் இழப்பிற்குப் பிறகும், அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக, பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் இருக்க அவ்சியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்த முதலீட்டில் செய்யும் ஒரு சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.

இன்றைய நாளில் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல அம்சங்களை கொண்ட திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆக அவற்றில் ஒன்றை, உங்களுக்கு ஏதுவான திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.