தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐ நெருங்கியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 20,768 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,07,112ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக  6,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,966ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,43,083 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,29,56,942 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று மட்டும் 17,576 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,72,322ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 153 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 70 பேரும், தனியார் மருத்துவமனையில்  83 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,826ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,20,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.