சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேசிய நலனுக்காக ஒன்று பட்டு பாடுபடுவோம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்று ஒழிப்பிலும், பிராந்திய தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மத்திய அரசு, தமிழக அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மேற்கு வங்க முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் வாழ்த்துகளை கூறியுள்ளார். மாநில அரசுகளுடன், மத்திய அரசு இணைந்து செயல்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.