தமிழகத்தில் பாஜக 3 இடங்களில் முன்னிலை.. !

தமிழக சட்டசபை தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ள நிலையில், மிக பரப்பான முடிவுகள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. இப்படி ஒரு நிலையில் காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. அதிமுக சற்று பின்னடைவை சந்தித்து இருந்தாலும், வலுவான எதிர்கட்சியாக அமரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப் படி பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக திருவண்ணாமலை, குளச்சல், ராமநாதபுரம், விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், மதுரை வடக்கு, தாராபுரம், திருக்கோயிலூர், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விலக்கு தொகுதி, நாகர்கோவில், திட்டக்குடி, கோயமுத்தூர் தெற்கு, தளி, காரைக்குடி, விளவங்கோடு, திருநெல்வேலி ஆகிய 20 இடங்களில் போட்டியிட்டது.

இதில் பாஜக வேட்பாளர்கள் மூன்று இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.