தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தோல்வி

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தி.மு.க. சார்பில் கயல்விழி செல்வராஜ், அ.ம.மு.க. சார்பில் கலாராணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இங்கு மொத்தமுள்ள 2லட்சத்து 58 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1லட்சத்து 91 ஆயிரத்து 709 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தனர். ஓட்டு சதவீதம் 74.15. இத்தொகுதியின் வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டது.

தொடக்கம் முதல் பாஜக அங்கு முன்னிலை பெறுவதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்து வந்தது.

இறுதியில், திமுக வேட்பாளர் கயல்விழியை விட1393 வாக்குகள் குறைவாக பெற்று எல்.முருகன் தோல்வி அடைந்தார்.

கயல்விழி பெற்ற வாக்குகள் 89,986 ஆகும். பாஜக வேட்பாளர் எல்.முருகன் பெற்ற வாக்குகள் 88,593 ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.