திமுத தலைவர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதியில் முன்னிலையில் இருக்கும் திமுகவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Congratulations to DMK leader, Thiru @mkstalin on his party’s victory in Tamil Nadu assembly elections. I extend my best wishes to him.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலையில் இருக்கும் திமுகவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி முகம் காணும் திமுகவுக்கு என்னுடைய வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.
இதேபோல கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.