பின்றாருய்யா விஜயன் கேரள முதல்வருக்கு ஒத்த வார்த்தையில் வாழ்த்து சொன்ன சித்தார்த்.. வைரலாகும் டிவிட்

|

சென்னை: கேரள சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து நடிகர் சித்தார்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கம்யூனிஸ்டுகள் முன்னிலை

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமையவுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்டுகள் 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.

மீண்டும் பினராயி விஜயன்

மீண்டும் பினராயி விஜயன்

இதன் மூலம் கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி அமையவுள்ளது உறுதியாகியுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்றாருய்யா விஜயன்

பின்றாருய்யா விஜயன்

அந்த வகையில் நடிகர் சித்தார்த் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பின்றாருய்யா விஜயன் என ஒத்தை வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார்.

அடிச்சு பொலிச்சு கேரளம்

மேலும் எனக்கு எப்படி ஸ்பெல் பண்ணவேண்டும் என்று தெரியும் மக்களே பினராயி விஜயனை புகழ்கிறேன் என்றும் அடிச்சு பொலிச்சு கேரளம் என்றும் பதிவிட்டுள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

பாஜக மீது விமர்சனம்

பாஜக மீது விமர்சனம்

நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாய் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து டிவிட்டி வருகிறார். அண்மையில் உபி முதல்வரை தரக்குறைவாக விமர்சித்தார், இதற்காக கொலை மிரட்டல்கள் அவருக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.